பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு


கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட உயர் தர மாணவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted on:
2017-03-22 19:41:07

பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட உயர் தர மாணவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பின் பிரதான பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் (21) கொழும்பு மஹாநாம கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், பொரளை யஷோதரா பாலிகா பாடசாலையினுள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ளவர்களை பீதிக்குள்ளாக்கியதோடு, பாடசாலையில் கடமையாற்றி வந்த ஒருவரையும் தாக்கிய நிலையில், குறித்த மாணவனை பாடசாலை பணியாளர்கள் பிடித்து, பொலிசில் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதோடு, கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிச ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பில், பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவோர், சட்டத்திற்கு புறம்பான வகையில் நடந்துகொள்வோர் தொடர்பில், மிக இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் தலைமையகத்தால், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.